Monday 29 June 2015

எது தானம்?









நாம் பிறருக்கு தானம் கொடுப்பது    மிக நல்ல ஒரு செயல்.  தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றும் கூறப்படுகிறது.


தானம் கொடுத்தால், புண்ணியம் கிடைக்கும் என்று  நினைப்பதால், பலர் இப்புண்ணியத்தை எதிப்பார்த்து, தானம் செய்வதுண்டு.!!!!


இதில் வேடிக்கை என்னவென்றல், தனக்கு, வேண்டாத , அல்லது பிடிக்காத ஒரு பொருளை மற்றவர்க்கு கொடுத்துவிட்டு, தானம் கொடுத்ததாக் பெருமை கொள்வதுதான்.!!

உண்மையான தானம் என்பது என்ன?  நமக்கு, பிடித்த ஒரு பொருளை  எந்த பிரதிபலனும் எதிப்பார்காமல், மற்றவருக்கு, மனதார கொடுப்பது தான்.


தானம் என்பது, எவ்வளவு கொடுக்கிறோம் என்பது மட்டும் அல்ல.

பணக்காரன் தான் தானம் செய்யமுடியும் என்பது இல்லை.

உதாரணமாக, மாதம், ஒரு லக்‌ஷம் சம்பாதிப்பவன்,  1000/- ரூபாய் கொடுப்பதற்க்கும், 10000/- சம்பாதிப்பவன்,  500/- ரூபாய் கொடுப்பதிற்க்கும் வித்தியாசம் உண்டு..  இதில் 500/- ரூபாய் கொடுத்தவன் 1000/- ரூபாய் கொடுத்தவனை  விட, மனதளவில் உயர்ந்து நிற்கிறான்.

பல கோவில் உற்சவங்களில் அன்னதானம் செய்பவர் உண்டு. இதில் ஒரு முறை  நடந்த  ஒரு சம்பவம் என்னை வியக்க வைத்தது.






பல வீடுகளில்  வீட்டு வேலை செய்து ,ரூபாய்   10000/-  சம்பாதித்து தன் குடும்பத்தை காப்பற்றும் ஒரு   ஏழைப்பெண்,,   ஒரு கோவில் உற்சவத்திற்க்கு, 400 பக்தர்களுக்கு  மேல்  அன்ன தானம் செய்தாள்.  இதில் முக்கியம்மானது என்னவென்றால்,   பலர் செய்வது போல், பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு பேசாமல்
இருக்காமல்,சமையல்செய்வதற்கு, சாதனங்கள் வாங்குவது,  இடத்தை சுத்தம் செய்வது, சமையல்காரர்களை ஏற்படுத்துவது,   தாகத்திற்கு நீர் மோர் தயாரிப்பது போன்றவற்றயும்  செய்து, பிறகு, அன்ன தானமும் செய்தாள்.

கோவில், திருவிழா என்பதால்,  பக்தர்களுக்கு தன் பங்கிற்க்கு, ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து, இதை செய்ததாக் கூறினாள்.

மாதம், 10000/- ரூபாய் சம்பாதிப்பவள், எப்படி 12000/- வரை  செலவழித்து  அன்னதானம் செய்தாள் என்ற  கேள்விற்க்கு, அவள் அளித்த பதில்,  " நான் இத்ததொகையை ஒருவரிடம், கடனாக பெற்றுள்ளேன்.  6 மாததிற்குள், கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவேன்" என்பது தான்.


"எச்சக் கையால் ஈ ஓட்டாத" சில  மனிதர்கள் மத்தியில்,   அவளது, பரந்த மனபான்மையை கண்டு,  மலைத்து நின்றேன்.

உள்ளத்தால்  பிரதிபலன் ஒன்றும் எதிர் பார்க்காமல்,   இவள் செய்ததல்லவா சிறந்த தானம்!!

மனமிருந்தல் மார்க்கம் உண்டு!!!